Thursday, August 27, 2009

என்ன எது

KISHINDAS GOBINRAM
கந்தசாமி வசூலில் சாதனை

விக்ரம் நடித்த கந்தசாமி வெளியாவதற்கு முன்பே புதிய சாதனையைப் படைத்து விட்டது. டிக்கெட் விற்பனை முன்பதிவில் ஒரே நாளில் 95 லட்ச ரூபாய் கலெக்சன் அள்ளியுள்ளதாம் கந்தசாமி. கந்தசாமி படத்தில் சீயான் விக்ரம், ஸ்ரேயா நடிக்கிறார்கள். சுசி கணேசன் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் கந்தசாமி, நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (21 Aug 2009) உலகம் முழுக்க திரையிடப்படுகிறது. கந்தசாமி பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட்டாகிவிட்டது. கந்தசாமி படத்தில் விக்ரம் நான்கு வேடத்தில் நடித்திருக்கிறார். குறிப்பாக பெண் வேடமும், வயதான தோற்றத்திலும் கலக்கியிருக்கிறார் விக்ரம். இந்த படத்தில் விக்ரம் சொந்த குரலில் பாடியிருக்கிறார். கந்தசாமி திரைப்படம் 18 சென்னையில் திரையரங்கத்தில் திரையிடப்படுகிறது. கந்தசாமி படம் 900௦ பிரதிகள் எடுக்கப்பட்டு திரையிடப்படுகிறது. படத்துக்கான முன்பதிவு 16ம் தேதி தொடங்கியது முதல் லட்சத்து நாற்பதாயிரத்திற்கு மேல் டிக்கெட்டுகள் விற்பனையாகியிருக்கிறது. முதல் நாள் கலெக்சன் மட்டுமே 95 லட்சத்தை தாண்டியதாம். கோலிவுட் வரலாற்றில் எந்த படத்திற்கும் இந்த அளவு வசூல் பண்ணவில்லையாம்.
ஏழை மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன்
வியாழன், 27 ஆகஸ்ட் 2009( 16:01 IST )
-->
தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களின் கல்விக் கடனுக்கான முழு வட்டியையும் மத்திய அரசே மானியமாக ஏற்றுக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று புதுடெல்லியில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.முழு வட்டி மானியத்தை பெற மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 4.5 லட்சமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்வியானாலும், பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு கிடைப்பதற்கு, இந்த வட்டி மானியம் உதவும் என்றும் அவர் கூறினார்.நாடு முழுவதும் இத்திட்டத்தால் மொத்தம் 5 லட்சம் மாணவர்கள் பலனடைவார்கள் என்றும் கூறிய சிதம்பரம், கடந்த மார்ச் 31ஆம் தேதி வரையிலான காலத்தில் மொத்தம் 16 லட்சம் மாணவர்கள் கல்விக்கடன் பெற்றுள்ளதாகவும், 24 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வணக்கம்,
புது வரவு