Thursday, August 27, 2009

கந்தசாமி வசூலில் சாதனை

விக்ரம் நடித்த கந்தசாமி வெளியாவதற்கு முன்பே புதிய சாதனையைப் படைத்து விட்டது. டிக்கெட் விற்பனை முன்பதிவில் ஒரே நாளில் 95 லட்ச ரூபாய் கலெக்சன் அள்ளியுள்ளதாம் கந்தசாமி. கந்தசாமி படத்தில் சீயான் விக்ரம், ஸ்ரேயா நடிக்கிறார்கள். சுசி கணேசன் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் கந்தசாமி, நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (21 Aug 2009) உலகம் முழுக்க திரையிடப்படுகிறது. கந்தசாமி பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட்டாகிவிட்டது. கந்தசாமி படத்தில் விக்ரம் நான்கு வேடத்தில் நடித்திருக்கிறார். குறிப்பாக பெண் வேடமும், வயதான தோற்றத்திலும் கலக்கியிருக்கிறார் விக்ரம். இந்த படத்தில் விக்ரம் சொந்த குரலில் பாடியிருக்கிறார். கந்தசாமி திரைப்படம் 18 சென்னையில் திரையரங்கத்தில் திரையிடப்படுகிறது. கந்தசாமி படம் 900௦ பிரதிகள் எடுக்கப்பட்டு திரையிடப்படுகிறது. படத்துக்கான முன்பதிவு 16ம் தேதி தொடங்கியது முதல் லட்சத்து நாற்பதாயிரத்திற்கு மேல் டிக்கெட்டுகள் விற்பனையாகியிருக்கிறது. முதல் நாள் கலெக்சன் மட்டுமே 95 லட்சத்தை தாண்டியதாம். கோலிவுட் வரலாற்றில் எந்த படத்திற்கும் இந்த அளவு வசூல் பண்ணவில்லையாம்.

No comments:

Post a Comment